உலக காசநோய் தின விழா

உலக காசநோய் தின விழா நடைபெற்றது.

Update: 2022-03-27 18:21 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காசநோய் மையத்தில் உலக காசநோய் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி தலைமை தாங்கினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பூவதி முன்னிலை வகித்தார். மருத்துவம் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அர்ஜீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். காசநோய் சம்பந்தமாக நடைபெற்ற கட்டுரை, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் குணமடைந்த காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மருந்தகத்திற்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்ட பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக நலக்கல்வியாளர் விஜயன் வரவேற்றார். முடிவில் மாவட்ட அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் ஜீவபாரதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்