விராலிமலை அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி

விராலிமலை அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-03-27 18:18 GMT
விராலிமலை:
விராலிமலை தாலுகா ராஜகிரி ஊராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 31). கூலி தொழிலாளி. இவர் இன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலைக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். விராலிமலை- புதுக்கோட்டை சாலை பகவான் பட்டி வேகத்தடை அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு வேன் சுப்பிரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்