நீலகேசி அம்மன் கோவிலில் 2007 திருவிளக்கு பூஜை

குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழாவையொட்டி நேற்று 2007 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-03-27 18:01 GMT
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழாவையொட்டி நேற்று 2007 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 
2007 திருவிளக்கு பூஜை
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழா கடந்த 23 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று 2007 திருவிளக்குப் பூஜை நடந்தது. 
நிகழ்ச்சியில் அம்மன் எழுந்தருளியுள்ள விழா பந்தலில் ஏராளமான பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர். முதல் தீபத்தை குலசேகரம் உண்ணியூர்கோணம் அஸ்வதி பெட்ரோலியம் நிர்வாகி குமாரி விஜயன் ஏற்றினார். பெட்ரோலியம் உரிமையாளர் ஆர். விஜயன் நேர்ச்சை செய்தார். திருவிளக்கு பூஜையை நெட்டாங்கோடு சாரதா தேவி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதா நடத்தினார். 
விஜய் வசந்த் எம்.பி. 
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார். அவரை கோவில் நிர்வாகிகள் ரமேஷ், ஸ்ரீஜூ, சுஜி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். 
விழாவில், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ராஜரெத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், கமல் சந்திரன், திற்பரப்பு பேரூராட்சித் தலைவர் பொன் ரவி, குலசேகரம் பேரூராட்சித் தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், வட்டாரத் தலைவர் வக்கீல் காஸ்டன் கிளிட்டஸ், வட்டார பொருளாளர் ஜேம்ஸ், நகர தலைவர் விமல் ஷெர்லின் சிங், நகர துணை தலைவர் கமல் சந்திரன், வார்டு உறுப்பினர்கள் எட்வின், ஏஞ்சல் ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காலையில் சமய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பண்பாட்டுப் போட்டி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்