கடற்படையினர் ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு
கடல் வழியாக இலங்கை அகதிகள் வருவதை தடுக்க கடற்படையினர் ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரைக்கு இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோவர்கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் நீரிலும், நிலத்திலும் செல்லும் வசதி கொண்டது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியாலும், உணவு பொருள் விலைவாசி ஏற்றத்தாலும் அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருவதை தடுக்கவும், இலங்கைக்கு உணவுப்பொருட்கள், உடைகள், தங்கம், எரிபொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடற்படையினர் கோடியக்கரையில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக கோடியக்கரையில் ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.