வளவனூர் அருகே போதை மறுவாழ்வு இல்லத்தில் வாலிபர் தற்கொலை

வளவனூர் அருகே போதை மறுவாழ்வு இல்லத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.;

Update: 2022-03-27 17:28 GMT

வளவனூர், 

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன் மகன் முருகன் (வயது 34). குடிபோதைக்கு அடிமையாகி இருந்த இவர், கோலியனூர் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

 இந்த நிலையில் அங்குள்ள ஜன்னலில் துண்டினால் தூக்குப்போட்டு அவர்  தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது அண்ணன் மூர்த்தி வளவனூர் போலீசில் அளித்த புகாரில், தனது தம்பியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்