வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

திருவையாறு அய்யாறப்பர் கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-03-27 17:18 GMT
திருவையாறு:
திருவையாறில் உள்ள  அய்யாறப்பர் கோவிலில் நேற்று காலை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மேட்டு தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு அய்யாறப்பர் கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்து இருந்தனர். இதையடுத்து கும்பகோணத்திற்கு சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றார். 

மேலும் செய்திகள்