நாமக்கல்லில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது
நாமக்கல்லில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் என 6 இடங்களில் நடந்தது. நாமக்கல்லில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தேர்தல் பொறுப்பாளர்களான அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலகண்ணன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருள்மொழி தேவன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்து வேட்புமனுக்களை பெற்று கொண்டனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் வேட்புமனுக்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்துடன் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மாவட்டம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியான முறையில் நடந்த இந்த தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வேட்புமனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.