ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
கோவையில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கோவை
மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள், கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் சார்பில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி வடகோவை சிந்தாமணி அருகில் தொடங்கி காமராஜர் ரோடு, திருவேங்கடசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு வழியாக அரசு தொழில்நுட்ப கல்லூரியை சென்றடைந்தது. பேரணியை கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய படி ஊர்வலமாக சென்றனர்.