கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

வலுதூக்கும், டேக்வாண்டோ போட்டியில் கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2022-03-27 16:58 GMT
கோவை

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஏ.கே.ஸ்ரீராம் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

 இதேபோல் அதை கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் மோகன் அரவிந்த் டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாணவர்களை அரசு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி மற்றும் உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்