சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

Update: 2022-03-27 16:42 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பூட்டை ஏரிக்கரை பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாண்டியன்(வயது 41) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சாராயம் விற்பனைசெய்து கொண்டிருந்த அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டிகிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் செல்வா(24) என்பவரை அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்