குருபரப்பள்ளி அருகே 3 மாடுகள் திருட்டு
குருபரப்பள்ளி அருகே 3 மாடுகள் திருட்டு போனது.;
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள கங்கசந்திரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 53). விவசாயி. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு இவர் மாடுகளை தனது கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்த போது 3 பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து கோவிந்தன் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.