கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ 20 லட்சத்தில் குழந்தைகள் வார்டு சீரமைப்பு
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 லட்சத்தில் குழந்தைகள் வார்டு சீரமைக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 லட்சத்தில் குழந்தைகள் வார்டு சீரமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு
கூடலூரில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு உள் மற்றும் வெளிப்புற நோயாளிகள் வார்டுகள், அவசர கால சிகிச்சை வார்டு, குழந்தைகள் வார்டு உள்ளது.
இந்த நிலையில்பல்வேறு திட்டங்களின் கீழ் ஆஸ்பத்திரியில் பல லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. ஆனால் குழந்தைகள் வார்டு எந்த பராமரிப்பும் இன்றி காணப் பட்டது.
இதனால் குழந்தைகளுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொது வார்டில் வைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு ஆஸ்பத்திரி நிர்வாகம் தன்னார்வ அமைப்புடன் இணைந்து ரூ.20 லட்சம் செலவில் குழந்தைகள் வார்டில் பராமரிப்பு பணி மேற்கொண்டது.
தொடர்ந்து 10 படுக்கைகள் மற்றும் வார்டுக்கு தேவையான பல்வேறு பொருள்களும் கொள்முதல் செய்யப்பட்டது.
திறப்பு விழா
இதைத்தொடர்ந்து புத்தம் புதிய தோற்றத்துடன் குழந்தைகள் வார்டு காணப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி பந்தலூர் பகுதியில் இருந்தும் தினமும் ஏராள மானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது குழந்தைகள் வார்டு பராமரிப்பு செய்து திறக்கப்பட்டு உள்ளது. இதேபோல் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவசர காலங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் ஊட்டி அல்லது கேரள மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி யாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.