கூடலூரில் படுகர் சங்க ஊர்வலம்

கூடலூரில் படுகர் சங்க ஊர்வலம் நடந்தது.;

Update: 2022-03-27 16:26 GMT
கூடலூர்

கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் படுகர் நலச் சங்க அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா  நடைபெற்றது.

 தொடர்ந்து சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை யில் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ரவி உள்பட ஏராளமான படுகர் சமுதாய மக்கள் ஊர்வலமாக புறப்பட்டு ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக மார்னிங் ஸ்டார் பள்ளிக்கூட மைதானத்தை அடைந்தனர்.

 அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர், பந்தலூர் தாலுகா மட்டுமின்றி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்