கிருஷ்ணகிரியில் அதிமுக உள்கட்சி தேர்தல்
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 2022-க்கான ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மீனவர் அணி மாநில இணை செயலாளருமான ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான சிறுநியம் பலராமன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர். தேர்தல் ஆணையாளர்களாக 30 பேர் பணியாற்றினார்கள். இதில், 12 ஒன்றியம், 2 பேரூராட்சி, ஒரு நகர செயலாளர் பதிவிக்கான தேர்தல் நடந்தது. இதையொட்டி 400-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வினர் போட்டிடுவதற்கான மனுவை அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.