தர்மபுரியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

தர்மபுரியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்தார்.;

Update: 2022-03-27 16:26 GMT
தர்மபுரி:
தர்மபுரி வெண்ணாம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 67). இவர் கடந்த 22-ந் தேதி அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் முனியம்மாள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்