கோத்தகிரியில் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கோத்தகிரியில் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
கோத்தகிரி
சென்னை பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மாணவர்கள், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் மற்றும் பழங்குடியின ஆய்வு மையத்தின் பங்களிப்பு டன் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மற்றும் சமூகப்பணியை மேற் கொண்டு வருகின்றனர்.
அவர்கள் கோத்தகிரி மார்க்கெட் திடலில் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அப்போது அவர்கள் கலைநிகழ்ச்சி மூலம் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டுப்புறப் பாட்டு, நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி விரிவுரையாளர் முனைவர் ஜோசப்பன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.