கோத்தகிரியில் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு

கோத்தகிரியில் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு நடந்தது.

Update: 2022-03-27 16:25 GMT
கோத்தகிரி

நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடுக்க துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 

அத்துடன் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டமும் கொண்டு வரப்பட்டது. இ்ந்த திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் பேரூராட்சி செயல் அதிகாரி மணிகண்டன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் ஊழியர்கள் பிளாஸ்டிக் பையை பயன்படுத்தக்கூடாது. 

அதற்கு பதிலாக மஞ்சப்பை, துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையும் நடத்தப்பட்டது. இதில் பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்