கோத்தகிரி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கோத்தகிரி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-27 16:25 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

பிளஸ்-2 மாணவி 

கோத்தகிரி அரவேனு அருகே உள்ள சக்கத்தா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி திவ்யா. இவர்களது மகள் சஞ்சனா (வயது 17). இவர் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

 கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ரமேஷ், திவ்யா இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சஞ்சனா தனது தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். 

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லை. இந்த நேரத்தில் சஞ்சனா ஒரு அறையில் தூக்கில் தொங்கினார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த திவ்யா, தனது மகள் தூக்கில் தொங்கியபடி பார்த்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சஞ்சனாவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சஞ்சனா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

போலீசார் விசாரணை

சஞ்சனா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வில்லை. 
இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்