நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update: 2022-03-27 18:30 GMT
நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோவிலில் 37-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குட ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக நடந்தது. தொடர்ந்து மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. கஞ்சிவார்த்தலும் நடந்தது. மாலையில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலம் வந்தனர். இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பூக்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்