உளுந்தூர்பேட்டை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய 2 வாலிபர்கள் கைது

உளுந்தூர்பேட்டை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய 2 வாலிபர்கள் கைது;

Update: 2022-03-27 16:22 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் கையில் தடியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்றுகொண்டிருந்த அப்பு என்கிற செல்வகுமார்(வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். 
இதேபோல் குமாரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்