தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு

தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு

Update: 2022-03-27 16:20 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் அருண் பாலாஜி. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அருண் பாலாஜி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் சொந்த தொழில் தொடங்க அவரது தாயாரான ராஜேஸ்வரியிடம் ரூ.3 லட்சம் கேட்டார். அதற்கு அவர், தற்போது உனக்கு ஜாதகப்படி நேரம் சரியில்லை, அதனால் 10 நாட்கள் கழித்து நகைகளை அடகு வைத்து பணம் தருகிறேன் என்று கூறினார். இதனால் மனமுடைந்த அருண் பாலாஜி, தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்ைச பலனின்றி அருண் பாலாஜி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்