ஆசிரியர்கள் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் - கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

ஆசிரியர்கள் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-03-27 18:45 GMT
திருவாரூர்:-

ஆசிரியர்கள் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார். 

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி திறனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திடும் வகையில் ஆசிரியர்கள் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும். பள்ளிகளின் வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியரின் பங்களிப்பு முக்கியமானது. 

ஈடுபாடு

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் ஆர்வமாக கல்வி கற்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியமாகும். திருவாரூர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்ட மாக திகழ அனைத்து ஆசிரியர்களும் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்