தீக்குளித்து நர்சு தற்கொலை

தேனி அருகே நர்சு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-27 15:35 GMT
அல்லிநகரம்:
தேனி அருகே உள்ள சுக்குவாடன்பட்டி, இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பொன்ராம். இவரது மகள் சித்ராதேவி (வயது 22). இவர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். 
இந்தநிலையில் சித்ராதேவி கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்ைச பெற்றார். ஆனால் வயிற்றுவலி சரியாகவில்லை. இதனால் மனமுைடந்த நிலையில் காணப்பட்ட சித்ராதேவி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். 
இதில் தீயில் கருகி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த தற்கொலை குறித்து  அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்