பள்ளிபாளையம்- திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்

பள்ளிபாளையம்- திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்

Update: 2022-03-27 15:28 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் இருந்து தோக்கவாடி வரை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு வரை செல்லும் சாலையில் ஆசிரியர் காலனி பஸ் நிறுத்தம் வரை மேம்பாலம் கட்டும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்து. மேலும் ஆலாம்பாளைத்தில் மேம்பாலம் கட்ட தூண்கள் அமைப்பதற்காக பிரமாண்டமான குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அங்கிருந்து பள்ளிபாளையம் வரை சுமார் 72 தூண்கள் அமைக்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மேம்பால பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பாலம் கட்டிய பின்னர் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்