புதுச்சத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

புதுச்சத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-03-27 15:28 GMT
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் சாவு
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் மோனிகா (வயது 22). என்ஜினீயரிங் முடித்து உள்ள இவர், வீட்டில் இருந்தவாறே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார்.
கடந்த 25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மோனிகா விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட மோனிகா மீண்டும் இங்கு அனுமதிக்கப்பட்டார். இங்கு நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து முத்துசாமி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மோனிகா வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்