குலசேகரன்பட்டினம்: வீரமனோகரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

குலசேகரன்பட்டின் வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது;

Update: 2022-03-27 15:28 GMT
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவிலில் சித்திரை  திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், விபூதி, பல மனப்பொடி, பால், குங்குமம் பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனையும், தொடர்ந்து அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனையும் மற்றும் காலை, மாலையில் அம்மன் சப்பர பவனி நடக்கிறது. திருவிழா வருகிற 5-ந் தேதி நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்