ரவுடியை வெட்டிய வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்
ரவுடியை வெட்டிய வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
அமைந்தகரை, செனாய் நகர், திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 38). ரவுடியான இவர் மீது கீழ்ப்பாக்கம், டி.பி. சத்திரம், முத்தியால் பேட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்த மாதம் 20-ந் தேதி வினோத் அமைந்தகரை, புல்லா அவென்யூ பகுதியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைக்கு மது வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத்தை வழி மறித்து வெட்டினர். இந்த தாக்குதலில் காயமடைந்த வினோத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அமைந்தகரை மஞ்ச கொல்லையை சேர்ந்த அபிமன்யு (25) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகளான கொடுங்கையூரை சேர்ந்த கூனி முருகன் (36), ராஜ்குமார் (32), கொருக்குபேட்டையை சேர்ந்த வினோத் (23), ஆகியோர் நேற்று முன்தினம் திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். அதே சமயம் மற்றொரு குற்றவாளியான ஆலப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (30) என்பவரை நேற்று முன்தினம் அமைந்தகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.