மேலானூர் கிராமத்தில் அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
திருவள்ளூரை அடுத்த மேலானூர் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளூரை அடுத்த மேலானூர் கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அதில் நெற் பயிரிட்டு விவசாயம் செய்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதனையடுத்து நேற்று திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் என வருவாய்த்துறை அதிகாரிகள் மேலானூர் பகுதிக்கு சென்று அங்கு ஏரியை ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டிருந்த 30 ஏக்கர் நெற் பயிர்களை முழுவதுமாக அகற்றினார்கள். ஏரியை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார்.