வேங்கடமங்கலம் கிராமத்தில் ரூ.25 கோடி அரசு நிலம் மீட்பு
வேங்கடமங்கலம் கிராமத்தில் ரூ.25 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.;
நிலம் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் 94 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்யப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வேங்கடமங்கலம் கிராமத்தில் தாங்கல் ஏரி நீர்பிடிப்பு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று மதியம் மண்டல தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வேங்கடமங்கலம் கிராமத்திற்கு சென்று வீட்டுமனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கற்களை அதிரடியாக அகற்றி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.
ரூ.25 கோடி
இதுகுறித்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:- வேங்கடமங்கலம் கிராமத்தில் மீட்கப்பட்ட 8 ஏக்கர் 94 சென்ட் அரசு நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.