ஆற்று மணல் திருடிய 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆற்றுமணல் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்வார்தோப்பு மற்றும் தோழப்பன்பண்ணை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த பேரூர் பகுதியைச் சேர்ந்த கொம்பையா மகன் முத்துராமன் (வயது 26), மற்றும் தோழப்பன்பண்ணை கிழக்கு தெருவை சேர்ந்தபாலசுப்பிரமணியன் மகன் பூல்பாண்டி (26), ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஆற்றில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மணல் திருடியது தெரியவந்தது. உடனே ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த 70 மூட்டைகளில் இருந்த ஆற்று மணலையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முத்துராமன் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், நெல்லை ஜங்ஷன் போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது