ழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.22 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
பழையகோட்டை மாட்டுத்தாவணி
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த மாடுகள் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
60 பசுமாடுகள் விற்பனை
101 காங்கயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 60 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் ரூ.22 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கயம் இன செவலை கிடாரி கன்றுடன், மயிலை பசுமாடு ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.