எலச்சிபாளையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
எலச்சிபாளையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜவேலு வெங்கடாசலம் முகாமை தொடங்கி வைத்தனர்.
மருத்துவ முகாமில் 105 மாணவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயன்பெற்றனர். இதில் 34 மாணவர்களுக்கு அடையாள அட்டையும், 3 மாணவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரையும், 5 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் பரிந்துரையும் வழங்கப்பட்டது. முகாமில் கண் மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், எலும்பியல் மருத்துவர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை, அறுவை சிகிச்சை மற்றும் உதவி உபகரணங்களுக்கு பரிந்துரை செய்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலக அலுவலர்கள் அடையாள அட்டை வழங்கினர். இந்த முகாமை மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகேஸ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.