குடியிருப்பு வாசிகள் மற்றும் கடைக்காரர்கள் குப்பை மற்றும் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்

குடியிருப்பு வாசிகள் மற்றும் கடைக்காரர்கள் குப்பை மற்றும் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்

Update: 2022-03-27 12:13 GMT
பல்லடம் அருகே உள்ளது மகாலட்சுமி நகர் பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீடுகள், மற்றும் பனியன் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இங்கு குப்பை கொட்டக்கூடாது எனறு ஊராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டும் அது குப்பையோடு குப்பையாகி போனது. குடியிருப்பு வாசிகள் மற்றும் கடைக்காரர்கள் குப்பை மற்றும் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர். பொதுமக்கள் நடமாடும் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது.மேலும் மகாலட்சுமி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள, கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டப்படுகிறது. எனவே மகாலட்சுமி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்தால் மட்டுமே குப்பைகளால் ஏற்படும், பிரச்சினைகளும் சுகாதார சீர்கேடும் சரியாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்