மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

மகளிர் சுயஉதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2022-03-27 11:51 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு அரசு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. கூட்டமைப்பினர் மாதாந்திர கூட்டங்களை முழுமையாக நடத்தி இருக்க வேண்டும். குழுவில் சேமிக்கப்படும் சேமிப்பு தொகையை சரியான முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். வங்கியில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.  திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பயிற்சிகளை அனைத்து உறுப்பினர்களும் பெற்றிருக்க வேண்டும். சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகள் ஈடுபட்டு இருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த 4 ஆண்டுகள் முடிந்த சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்திலும், நகர்ப்புறங்களில் தகுதியான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களிலும் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை 0421 2971149 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்