திருநீர்மலை பெருமாள் கோவில் தேரோட்டம்
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பெருமாள் கோவில் தேரோட்டம் தெற்கு மாடவீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தது.
பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவிலில் கடந்த 20-ந் தேதி முதல் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. தினசரி சுவாமி ஊர்வலம் நடந்து வரும் நிலையில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி, விழாவின் 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அப்போது காலை 8 மணிக்கு வீதிகளில் வலம் வந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் ஒன்று கூடி கோவிந்தா! கோவிந்தா! என பக்தி கோஷம் எழுப்பினர். இந்த விழாவில், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி துணை மேயர் ஜி.காமராஜ் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தேரடி தெரு, வடக்கு, கிழக்கு, தெற்கு மாடவீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக சென்று மதியம் 11:30 மணிக்கு கோவிலை சென்றடைந்தது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.