தென்காசியில் பா.ஜனதா சார்பில் பொதுமக்களுக்கு நீர்- மோர் வழங்கல்
தென்காசியில் பா.ஜனதா சார்பில் பொதுமக்களுக்கு நீர்- மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
தென்காசி:
தென்காசி 23-வது வார்டு பா.ஜ.க. சார்பில் தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள இசக்கியம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு நீர்- மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி நகராட்சி பா.ஜ.க. கவுன்சிலர் சுனிதா முத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர பா.ஜ.க. தலைவர் குத்தாலிங்கம், நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார், கிளை தலைவர் ராஜசேகர், வார்டு தலைவர் கார்த்திக் சீனிவாசன், முருகன், ரகுபதி ராஜா, சுதர்சன், மகேஸ்வரி, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.