பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அவசர கூட்டம், யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. யூனியன் தலைவி காவேரி தலைமை தாங்கினார். யூனியன் துணைத்தலைவர் முத்துகுமார், ஆணையாளர் முருகையா, கூடுதல் ஆணையாளர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.