சிவகிரி: வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து சேதம்

வைக்கோல் படப்புகளில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது

Update: 2022-03-26 23:03 GMT
சிவகிரி:
சிவகிரி வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் குருவையா. விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் சிவகிரி காந்தி ரோடு முதலாவது தெருவில் வைக்கோல் படப்புகளை வைத்திருந்தார்.
நேற்று மாலையில் அந்த வைக்கோல் படப்புகளில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் படப்புகள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்