தென்காசி அருகே தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,551 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்

1,551 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்

Update: 2022-03-26 22:51 GMT
அச்சன்புதூர்:
தென்காசி அருகே நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,551 பேருக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்த முகாமுக்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் மகாலட்சுமி வரவேற்று பேசினார்.
தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி தலைவர் மணிமாறன், கல்லூரி முதல்வர் பீர் முகைதீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பணி நியமன ஆணை
முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்று நேர்முகத்தேர்வு நடத்தி, தங்களது நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக பல்வேறு தனியார் நிறுவன பணியிடங்களுக்கு மொத்தம் 1,551 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை, யூனியன் தலைவர்கள் தென்காசி சேக் அப்துல்லா, செங்கோட்டை திருமலைச்செல்வி, கடையநல்லூர் சுப்பம்மாள், சங்கரன்கோவில் லாலா சங்கரபாண்டியன், துணைத்தலைவர்கள் தென்காசி கனகராஜ் முத்துப்பாண்டியன், கடையநல்லூர் ஐவேந்திரன் தினேஷ்,
ஒன்றிய கவுன்சிலர்கள் பகவதியப்பன், சிங்கிலிபட்டி மணிகண்டன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் குருநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்