பெங்களூருவில், ரெயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

பெங்களூருவில் ரெயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது;

Update: 2022-03-26 22:20 GMT
பெங்களூரு: பெங்களூரு உரமாவு பகுதியிலுள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை ஒரு இளம் பெண்ணும், ஒரு வாலிபரும் இறந்து கிடந்தனர். இதுபற்றி அறிந்த பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணின் பெயர் சேத்தனா என்பதும், அந்த வாலிபரின் பெயர் ஸ்ரீசந்திரா என்பதும் தெரியவந்தது. 

மேலும் காதல் ஜோடியான இவர்கள் 2 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால் ஸ்ரீசந்திராவின் பெற்றோர் காதல் விவகாரம் பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் காதல் ஜோடி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்