கோபி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை- திருமணம் ஆன 13 மாதத்தில் பரிதாபம்

கோபி அருகே திருமணம் ஆன 13 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-03-26 22:19 GMT
கடத்தூர்
கோபி அருகே திருமணம் ஆன 13 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். 
கருத்து வேறுபாடு
கோபி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி உஷா (வயது 19). 13 மாதங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, உஷா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 
இதனால் உஷா தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதற்கிடையே இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது. 
விஷம் குடித்தார்
இந்தநிைலயில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உஷா விஷம் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் உஷா இறந்துவிட்டார்.  இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மணிகண்டனுக்கும், ஊஷாவுக்கும் திருமணம் ஆகி 13 மாதங்களே ஆவதால், கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்