உருட்டுக்கட்டையால் பெண் அடித்து கொலை; கணவர் கைது

ஸ்ரீரங்கப்பட்டணாவில் உருட்டுக்கட்டையால் பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-26 22:15 GMT
மண்டியா: ஸ்ரீரங்கப்பட்டணாவில் உருட்டுக்கட்டையால் பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கனங்கூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவருடைய மனைவி பிரபாவதி (வயது 28). சந்திரசேகர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. 

இதன்காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் குடும்ப பிரச்சினை தொடர்பாகவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. 

அடித்து கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினமும் சந்திரசேகர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து பிரபாவதியை சரமாரியாக தாக்கினார். மேலும் அவருடைய தலையிலும் ஓங்கி அடித்துள்ளார். இதில் பிரபாவதியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கப்பட்டணா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான பிரபாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

கணவர் கைது

இதுகுறித்து ஸ்ரீரங்கப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். 
மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்