கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.

Update: 2022-03-26 21:47 GMT
பெரம்பலூர்:
தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பெரம்பலூரில் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்து பேசினார். போலீஸ் சூப்பிரண்டு மணி அறிமுக உரையாற்றி வாழ்த்திப் பேசினார்.
இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரமணகோபால், தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் சித்ரா, பேச்சுப் போட்டியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாகிர் பாட்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுத்திறனை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்