மாவட்டத்தில் 5 மையங்களில் தட்டச்சு தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் 5 மையங்களில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது.

Update: 2022-03-26 21:02 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் (2 மையங்கள்) ஆகிய இடங்களில் தமிழக தொழில்நுட்ப தேர்வுகள் இயக்கத்தின் தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு இன்றும் நடக்கிறது. இதில் மொத்தம் 7,800 பேர் தேர்வு எழுதினர். முதல் நாளான நேற்று ஆவணங்கள் தட்டச்சு செய்தல் தேர்வு நடைபெற்றது. 
2-வது நாளான இன்று தட்டச்சு வேகம் தொடர்பான தேர்வு நடைபெறுகிறது. இதில் இதுவரை தட்டச்சு வேகம் தொடர்பான தேர்வு முதல் நாளும், ஆவணங்கள் தட்டச்சு செய்வது 2-வது நாளும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தேர்வர்களை பாதிக்கும் நிலை உள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்