களக்காட்டில் குண்டர் சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைப்பு
குண்டர் சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு, தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை கலெக்டர் விஷ்ணு இதை ஏற்று முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதற்கான உத்தரவு நகலை நேற்று இன்ஸ்பெக்டர் பிரேமா பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்.