கதக் அருகே கிராமத்திற்குள் புகுந்த குட்டி முதலை பிடிபட்டது
கதக் அருகே கிராமத்திற்குள் புகுந்த குட்டி முதலை பிடிபட்டது
கதக்: கதக் மாவட்டம் ரோன் தாலுகா ஒலேஆலூர் கிராமத்திற்குள் நேற்று ஒரு குட்டி முதலை புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் அந்த குட்டி முதலையை வலை வைத்து பிடித்து சென்றனர். ஒலே ஆலூர் கிராமத்தில் மல்லபிரபா ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றில் இருந்து குட்டி முதலை ஊருக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. அந்த குட்டி முதலையை தேடி தாய் முதலையும் ஊருக்குள் வரலாம் என்று கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.