தொழிலாளி சாவு

லாரியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-26 20:31 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே முகவூர் வீராச்சாமி தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (37). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் இளந்திரைகொண்டான் அருகே குடோனில் நெல் மூடைகளை லாரியில் ஏற்றும் போது கால் தவறி மூடையுடன் லாரியிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்