மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மலையில் அறிய வகை பறவைகளும், பழங்கால கல்வெட்டுக்கள் உள்பட புராதன சின்னங்கள் பல உள்ளன. இங்குள்ள மலை அடிவார காட்டு பகுதியில் யாரோ விஷமிகள் தீ வைத்து விட்டனர். செடிகள் மரங்களில் தீபிடித்து இரவில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அரிய வகை பறவைகள் உள்பட பல்லுயிர் இனங்கள் பாதிப்படைந்துள்ளன. வன இலாகாவினரிடம் தகவல் தெரிவித்தும் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தினால் வன விலங்குகள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடும் என அச்சத்தில் அரிட்டாபட்டி கிராம மக்கள் உள்ளனர்.