மூதாட்டியிடம் நகை பறிப்பு

அருப்புக்கோட்டையில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றனர்.;

Update: 2022-03-26 20:20 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மனைவி சந்திரா (வயது 73). இவர் பாரதிநகர் 3-வது தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்