காக்கி உதவும் கரங்கள் திரட்டிய ரூ. 24 லட்சம் நிதி

காக்கி உதவும் கரங்கள் திரட்டிய ரூ. 24 லட்சம் நிதியை போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வழங்கினார்.;

Update: 2022-03-26 20:16 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டம் மல்லி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் முத்துக்குமார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 29.11.2021-ல் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் கடந்த 2011-ல் பணியில் சேர்ந்த காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ‘காக்கி உதவும் கரங்கள்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பினர் திரட்டிய நிதி ரூ.24 லட்சத்திற்கான வங்கி வைப்பு நிதி சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மூலம் முத்துக் குமாரின் மனைவி மற்றும் பெற்றோரிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்